விதி முடிந்ததாய் பதிவேதுமில்லை

பெரிய கடைத்தெருவென
பேரெடுத்து—மண்ணில்
சின்னக் கடைத்தெருவாய்
சிறுத்து காட்சி தரும்

வெள்ளப் பெருக்கில்
அள்ளியெடுத்து செல்லும்
ஆறுபோல
வாகனங்கள் கரை புரளும்

மழை நீரை சேமிக்க
மனிதர்கள் மறந்தபோது
தெருவெங்கும் தேக்கி வைத்து
பெருமை சேர்க்கும்

இரு பக்கமும் நின்றிருக்கும்
இரு சக்கர வண்டிகள்
பாதையை மறைத்தாலும்
பாதசாரிக்கு முதல் மரியாதை

எதுவும் நடந்திடுமோவென
நெஞ்சில் பயத்தோடு
உயிரைக் கையில் பிடித்து
நடக்கும் ஊர்மக்கள்

எது நடந்தாலென்னவென
கவலை ஏதுமில்லாம
காலார நடந்து உணவு தேடும்
கோயில் மாடுகள்

பாவம் பெரிய கடைத்தெரு
பாதியாய் சிறுத்ததால்
பழிபாவம் சுமந்தாலும்—விபத்தில்
விதி முடிந்ததாய் பதிவேதுமில்லை.

எழுதியவர் : கோ.கணபதி (2-Oct-14, 9:28 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 42

மேலே