பெரியம்மாவுக்கு - கே - எஸ்- கலை

கொஞ்சம்
உறுத்தலாக தான் இருக்கிறது !

அன்னை என்றால்
தெரேசா என்ற
அழகு பொருள் தந்தது
பாரதம்....

அம்மா என்றால்
ஜெயா என்ற
அழுக்கு பொருள் தந்தது
தமிழகம் !

ஒரு வாய்ச்
சோற்றுக்காக...
ஒரு துண்டு
சேலைக்காக...
ஒரு குப்பி விளக்கு
எரிபொருளுக்காக....
ஒரு கரிக்கோல் வாங்கும்
கனவுக்காக....
குமுறலும் கண்ணீரும்
வியர்வையும் வடித்த
வறியவர் உதிரத்தை
வரியாய் மாற்றி
வாரிச் சுருட்டினீர்கள்....

உங்கள்...

சதி மிக கொடியது
நீங்களே அறிந்தது...
விதி மிக கொடியது
சர்வமே அறிந்தது...!

இடி அமீன், ஹிட்லர்
இவரெல்லாம் கூட
இத்தினியூண்டாய் ஆகிப்போக
இத்தனை ஆண்டு
இரும்பு பெண்ணாய்
இருந்தது சாதனை !
இனிமேல் சோதனை !!

நீதியை
குழி தோண்டிப் புதைத்தீர்கள்....
என்ன செய்ய...
புதைத்த நீதி முளைத்து வர
பதினெட்டு ஆண்டுகள்
போயிருக்கிறது....!

அன்று...
வெண்ணிற ஆடையில்
திரைக்குள் வந்தீர்கள் !
இன்று...
வெண்ணிற ஆடையில்
சிறைக்குள் இருப்பீர்கள்....!!!

பாவம் அந்த
பாமரத் தமிழகம்....
பன்னீர் செல்வத்தின்
கண்ணீர் வெள்ளத்தில்
மூழ்கிக் கிடக்கப் போகிறது....

ஒன்று மட்டும் உறுதி....
உங்களைவிட திறமையாய்
நடிக்கிறார்கள்....உங்களின்
அழுமூஞ்சி ஆட்சியாளர்கள் !

நீங்கள் உள்ளே போனதால்
பலருக்கு உயிரே போனது !
நீங்கள் வெளியே வந்தாலும்
பலருக்கு உயிரே போகுமே ?

பிணையில் வரலாம்
அல்லது
நான்கு வருடத்தின்
பிறகும் வரலாம்....

வாருங்கள்...

சிறைக்கு போய் வந்தாலும்
“சிவப்பு கம்பள” வரவேற்பு
உங்களுக்காய் காத்திருக்கும் !

ஏனெனில்...

திருந்தவே மாட்டோம்
என்பதில் உறுதியாய் இருக்கிறார்கள்
தொண்டர்களும்....குண்டர்களும் !

எழுதியவர் : கே.எஸ்.கலை (2-Oct-14, 8:26 am)
பார்வை : 144

மேலே