கும்கி - நாகூர் கவி
![](https://eluthu.com/images/loading.gif)
என்னை தெரிகிறதா...?
என் பெயர் தான்
வாகனம்... !
என்னை
இயக்கும் இயக்குனராக
பெட்ரோலியம் இருந்தாலும்...
என்னை தினம்
இயக்குபவன்
நீதானே மானிடா... ?
உன்னையும்
உன் சுமைகளையும்
சுமக்கும் என்னை....
காலால் உதைக்கிறாயே
இதுதானோ உன் பண்பு...?
உன்னை
அப்படியும் சுமப்பேனே
அதுதானே என் அன்பு... !
நீ செல்ல
நான் விரைகிறேன்...
நீ பயணிக்க
நான் தேய்கிறேன்... !
உன் இறக்கைகள்
நான் தானே...?
உன் இருக்கைகள்
யாம் தானே... ?
சாலை வளைவுகளோ
வந்துவிட்டால்
உரக்க சப்தம்
போட்டு சொல்வேனே... ?
கூட்ட நெரிசல்களில் நீ
சிக்கிக் கொண்டால்
உனக்காக கோஷம்
போட்டு செல்வேனே... ?
என் கட்டழகு
கால்கள் இரண்டையும்
சாணி மிதிக்க வைப்பாயே...!
எந்தன் மேலே நீ
அமர்ந்தால்
வீதியில் தினமும்
சினிமா ஹீரோப்போல மின்னுவாய்... !
ஒரு நாள் எனக்கு
உடல்நிலை மோசமானால்
என்னை
ஜீரோப்போல எண்ணுவாய்...!
வெயில் புயல்
மழை வெள்ளம்
பனி பாராமல்
உன்னை சுமந்தேன்...!
உன்னாலே
தேய்ந்து தேய்ந்து
என் உடல் உறுப்புகள்
சோர்ந்து போயின...!
உன்னாலே நான்
முதுமையானேன்
என்னாலே நீ
புதுமையானாய்...!
எந்தன் சேவை
இனி உனக்கு
தேவையில்லையா...?
அதனாலே
என்னை நீயும்
விற்க போறீயா...?
என்னை மாற்றி
என்னை மாட்டி
விற்றிடுவான் இன்னொருத்தன்...!
வாழையடி வாழையாக
தொடரும் பயணம்
மேற்கொள்வேன்...!
தோழமைகள் அனைவருக்கும்
இனிய ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்.....!