+தேன் தேன் படைத்தேன்+
![](https://eluthu.com/images/loading.gif)
தேன் தேன் படைத்தேன்
நகைத்தேன் என்றால் சிறப்பு
புகைத்தேன் என்றால் ஆப்பு
ரசித்தேன் என்றால் அழகு
புசித்தேன் என்றால் நிறைவு
அளித்தேன் என்றால் உயர்வு
அழித்தேன் என்றால் குறைவு
பார்த்தேன் என்றால் ரசிப்பு
பார் தேன் என்றால் இனிப்பு
படைத்தேன் என்றால் கடவுள்
பகிர்ந்தேன் என்றால் மனிதன்
உடைத்தேன் என்றால் குறும்பு
புடைத்தேன் என்றால் உமி
கடித்தேன் என்றால் எலும்பு
சுவைத்தேன் என்றால் கறும்பு
தேன் தேன் என்றால் தமிழ்தேன்
தேன் தேன் என்றால் தமிழ்தேன்