வலியின் வழியில் உன் நினைவுகளோடு ஏனோக்

முதன் முதலாய்
ஒரு பிரிவு
முதன் முதலாய்
ஒரு வலி

இது வரை இப்படி
உணர்ந்ததில்லை

இப்படி எனக்கு நேர்ந்ததும் இல்லை

நீ ஒரு பாதையில்
நான் ஒரு பாதையில்

நீ விமானப் பாதையில்
நான் புகையிரதப் பாதையில்

நீ பறந்து கொண்டிருக்கிறாய்
நான் உன்னை நினைத்து
இறந்து கொண்டிருக்கிறேன்

நான் ஏதோ
நரகத்தை நோக்கி
பயணிப்பதாய் உணர்கிறேன்
என்னை கடந்து போகும்
காட்சிகளில் எல்லாம் நரக வாசனை

சுற்றி அந்தகாரம்

அக்கம் பக்கம்
ஆயிரம் பேர் இருந்தும்
நான் மட்டும் தனிமையில்

தோழியே
உன் குறுஞ்செய்திகள்
வந்து சேராத என் கைபேசி
குப்பையில் வீசப்பட்ட
பண்டமாய்
என் சட்டை பைக்குள்.





வலியின் வழியில்
ஏனோக்
-------------------------------------------------------------------------------------------------------------------------------------------

என் தோழி என்னை விட்டு தூர தேசத்திற்கு விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் போது
நான் புகையிரததில் அவளை நினைத்த படியே பயணித்து கொண்டிருந்தேன்.
அப்போது என் மனதில் தோன்றிய சில வரிகள் தான் இவை .

எழுதியவர் : ஏனோக் நெகும் (2-Oct-14, 11:54 am)
பார்வை : 285

மேலே