பிடிச்சிருக்கு ஆனா பிடிக்கல- ப்ரியன்

தளம் பார்க்க பிடிச்சிருக்கு
ஆனா அதன்
தொய்வு இப்போ பிடிக்கல

கவிதைகள் பிடிச்சிருக்கு
ஆனா புரியாத
மரபுகளால் பிடிக்கல

எண்ணம் பிடிச்சிருக்கு
ஆனா அதில்
ஏசல்பூசல் பிடிக்கல

கேள்விபதில் பிடிச்சிருக்கு
ஆனா நல்லதை
கேட்பாரன்றி பிடிக்கல

கருத்திடல் பிடிச்சிருக்கு
ஆனா என் படைப்பிலதை
காணாததால் பிடிக்கல

நட்புவட்டம் பிடிச்சிருக்கு
ஆனா அதில்காட்டும்
நம் பாரபட்சம் பிடிக்கல

எழுத்து பிடிச்சிருக்கு
ஆனா அதில்
எழுதிடத்தான் பிடிக்கல.

நன்றி : நாகூர் கவி (என் படைப்புகளை காணவில்லை என கேட்டு இதை எழுத வைத்தமைக்கு)

எழுதியவர் : ப்ரியன் (3-Oct-14, 12:21 pm)
பார்வை : 245

மேலே