வாழ்த்து

மாலை சூரியன் நிறமென முகமோ
காலை பகலவன் ஒளியென விழியோ
காணப் பறவைகள் இசையென குரலோ
தேன் இன்பச்சுவையென இதழோ
வைகை நாட்டின் வெண் முத்தால்
கொங்கு களிற்றின் தந்தம் கொணர்ந்து
செதுக்கி எடுத்த உடல்அல்லோ
முழு கிரகண சந்திர திருநாளில் இவ்
வையகம் ஆளப் பிறந்த என் தோழமைக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்

எழுதியவர் : (4-Oct-14, 4:46 pm)
Tanglish : vaazthu
பார்வை : 153

மேலே