என் தேவதையே
நிலவு சதிகாரி--- நீ
அழகின் அகராதி
உன் அழகை சொல்லிடவே
தமிழில் தேடினேன் ஒரு பாதி
உன்னால் என்னில் எழும் கேள்வி
நீ அழகின் மொத்தமா --இல்லை
மற்றவை உன் அழகின் பிம்பமா
எப்போதும் மௌனம் உன்னிடம்
என் காதல் அதனால் கவலைக்கிடம்
மௌனம் உடைபடுமா
ஒரு வார்த்தை வெளி வருமா
என் தேவை எல்லாம்
தெளிவான பதில்தானம்மா