சித்தார்த்தன் முகமூடி

வானம்
பறக்கிறது
பின்னோக்கி
-பறவையின் சிந்தனை-
நதி முழுக்க
குடித்த பின்
வயிறு வெடித்தது
-கோடை மண்ணின் வெடிப்பு-
சட சடவென
விழுந்த
மழைத்துளி
-தலை கொட்டும் சட்டாம் பிள்ளை -
புத்தனை
தேடிக் கொண்டேயிருந்தான்
புத்தன்
- சித்தார்த்தன் முகமூடி-
காமம்
சீ என்றே
முடிகிறது
- காதலைப் போலவே-
கவிஜி