கடைநிலை கவிஞன்
ஆழ்கடல் செல்பவன் அல்ல
சிறந்த முத்துக்கள் எடுப்பவன் அல்ல
மேலோட்டமாய் வலை வீசி
சில மீன் கூட்டங்களை
எனதாக்கி
கரை திரும்பும் கடைநிலை
மீனவன் நான்
விலையுயர்ந்த முத்துக்களை
விற்க இயலாது
ஆனால் சில நாவூறும்
மீன்களை
நாள்தோறும் விற்கிறேன்
எனக்கு வாடிக்கையாளர்களும்
உண்டு
என்னை வேடிக்கை செய்வோரும்
உண்டு
ஆனால் நான் நானாகவே
உள்ளேன்
என் வாடிக்கையாளர்களுக்கு
விருந்தளித்து கொண்டே இருப்பேன்
நான் ஆழ்தமிழ் கற்றவனில்லை
ஆனால் அழகு கவி விற்பவன்
ஆம் நான் கடைநிலை கவிஞன் தான்