மனிதா நீ

மனிதா நீ வானாகி விடு!
பிறர்க்கு நீ தருகையில்.
ஏற்றத் தாழ்வொன்றும் நீ பாராதே!

மனிதா நீ காற்றாகி விடு!
பிறர்க்கு நீ உதவுகையில்.
புகழ்ச்சிக்கென்றும் நீ மயங்கதே!

மனிதா நீ நீராகி விடு!
பிறர் துயர் காண்கையில்.
உன் கண்முன் பிறரை அழவிடதே!

மனிதா நீ நிலமாகி விடு!
பிறர் உன்னை நம்ப மறுக்கயில்.
பொறுமை என்றும் நீ இழக்காதே!

மனிதா நீ நெருப்பாகி விடு!
பகைவர் உன்னை எதிர்க்கயில்.
வெற்றியைத் தவிர வேறு ஒன்றை நினையாதே!

ஐம்புலன்களை அடக்கிடு
ஐம்பூதங்களை வென்றிடுவாய்...
சகமனிதனை மதித்திடு
சகலமும் பெற்று நிலைத்திடுவாய்
என்றும் இம்மண்ணும் விண்ணும் போற்றிட...

எழுதியவர் : முத்தழகுராஜா (4-Oct-14, 8:00 pm)
Tanglish : manithaa nee
பார்வை : 69

மேலே