ஒரு ஜோடி வத்தி

ஏத்தி வச்ச வத்தி வாசம் மாறிப்போச்சு
காதல் கருவறை புகை யாச்சு

கைப்பட்டு இதயம் இரண்டாச்சு
கலங்கிய கண்ணிரண்டும் தீர்ந்தே போச்சு

தீ பட்ட சருக போல
எண்ணி எரிஞ்சி போனா
உன் வருக இல்லா தாலா


ஆத்திர ஆதவனால் சுட்டேன்
என் பனி மலரே
எனை பார்த்து முகம் மலர மாட்டாயோ
ஐவ்வாது சோடி காரி சட்டெனு
முடிச்சியே மன்னித்து ஏற்க மாட்டாயோ
பூத்த மரம் பொசுங்கி போச்சு
சுட்டு எரிச்சு கொண்றேனே
எட்டி அணைக்க நின்றேனே

தீ யிட்ட சருக போல
எண்ணி எரிஞ்சே உன்னாலே

ஏத்தி வச்ச வத்தி வாசம் மாறி போச்சு
காதல் கருவறை புகையா போச்சு
கை பட்டு இதயம் இரண்டாச்சு
கலங்கிய கண் வரண்டே போச்சு

நீ இல்லா வாழ
நா நீர் இல்லா ஓட
காதல் மீன் வாட
என் கலங்கிய கருவிழியில் குடி ஏற

ஏத்தி வச்ச வத்தி வாசம் மாறி போச்சு
காதல் கருவறை புகையா போச்சு

கைப்பட்டு கைப்பட்டு இதயம்
துண்டா ஆச்சு
கலங்கிய கண் வரண்டே போச்சு

காதல் இல்ல கை குட்ட நினச்ச
கை கிட்ட இருக்கன் என்ன மறச்ச
ஒரே ஒரு முறை நினைக்காமா எரிச்ச

எரிஞ்சு நின்ன குச்சும் வாசமா ஆச்சு
நீ இல்லா என் நெஞ்சம் நாசமா போச்சு

ஏத்தி வச்ச வத்தி வாசம் மாறி போச்சு
காதல் கருவறை புகையா ஆச்சு
கை பட்டு இதயம் கலங்கி போச்சு
கண் ரெண்டும் வரண்டே போச்சு

எழுதியவர் : கிருஷ்னா (5-Oct-14, 1:57 pm)
Tanglish : oru jodi vaththi
பார்வை : 192

மேலே