அவனின் கோபம்

அவனுள் எழும்
நெருப்பு
என் மீதுதான் தணிக்கபடுகிறது
அவனுள் எழும்
கேள்வி
என் மீதுதான் திணிக்கபடுகிறது
அவனுள் எழும்
வக்கிரம்
என் மீதுதான் செயல்படுத்தபடுகிறது
அவனுள் எழும்
ஆதங்கம்
என் மீதுதான் காண்பிக்கப்படுகிறது
அவனுள் எழும்
செயல்
என் மீதுதான் பயன்படுத்தபடுகிறது
அவனுள் எழும்
குழப்பம்
என் மீதுதான் காயபடுத்தபடுகிறது
அவனுள் எழும்
எண்ணம்
என் மீதுதான் கிறுக்கபடுகிறது
அவனுள் எழும்
பாசம்
என்மீது ஏன் காட்டப்படவில்லை இன்னும்