என் மகன் தாய்யின் பார்வையில்
உறவில் சிந்திய கண்ணீரில் பிறந்த ஆனந்தம் நீ அடா...
என் உலகம் உன்னை சுமந்த நாட்கள் இன்பத்தின் எல்லை அடா..
உன் கால்கள் மன்மிது பட, என் கரங்களை தரையான விரித்த
நிமிடங்கள்... அழகு...
உன் கரங்கள் பிடித்து என் கண்ணுக்குள் நடந்தான்
நிமிடங்கள்.... அழகு...
என் மாணமும் மரத்து போனது உன் தாய்மை என்னும்
பசியின் அழுகுரலில்...
கணவன் இருப்பினும் காதலை மறைதேன் உன்னை
என் மடியில் சுமந்த பொழுது...
என் தாய் மொழிக்கும் தாய்மை உள்ளதை உணர்ந்தான்
நீ அம்மா என்று கரும் பலகையில் எழுதிய பொழுது...
நான் ரசிக்க நீ வளர்ந்தாய்... நீரின் பயன் பூக்களை
சுமந்து பிரசவிக்கும் சேடியான...
குழைந்தை என்று நினைத்து வன்தேன் இதுவரை உன்னை..
என் துணை இவள் என்று சொன்னாய் நீ..
அவள் கரங்களை பிடித்து
இவளும் என் மகள் தான் என்றேன் உன் இடம்...
பாசத்திற்கு காலங்கள் நேரங்கள் தேரிவதில்லை
என் முதுமையை போல...
இன்றும் நீ எனக்கு வளர்ந்த பிள்ளை தான்..
என் இறப்பில் என்னை நீ சுமக்கும் பொழுது
என் உயிர் படும் வேதனைகள்...
உன் கரங்கள் வலிக்கும் என்று நினைத்து...! நினைத்து....!