அம்மா

உறவுகளை உச்சரிக்க தொடங்கிய
நாவின் முதல் சுலர்சி - அம்மா
உதிரத்தில் குளிப்பாட்டி உலகத்தில்
போரட அனுப்பிய அரசி- அம்மா .

அம்ம என்னும் உறவை அருந்து
போன தொப்புல் புள்ளியும் சொல்லும்....!
அவளுக்கு கொள்ளி போடும்
கொள்ளி கட்டையும் சொல்லும்.

ஆண்டவனுக்கு அம்மா இல்லையாம்
யார் கண்டது....?
அம்மாவை மிஞ்சிய ஆண்டவனும் இல்லைதாம்
இது நான் கண்டது....!

நிலா காட்டி சோறு ஊட்டிய அம்மா
நிலாவை காட்டியும் உன் முகம் தான்
எனக்கு அழகு அம்மா.....!

எழுதியவர் : அன்பரசு (4-Oct-14, 7:52 pm)
சேர்த்தது : விஷ்ணு
Tanglish : amma
பார்வை : 441

மேலே