உயிர்த்தெழும் பொழுது

பெருநாள் என்னும் பெரும்நாள்
உலகின் வெளியெங்கும் உலவி
தியாகத்தின் திருநாளாய்
தேகிட்டாத பெருநாளாய் மலரும்

புத்தாடை தரித்த பூந்தளிர்கள்
மத்தாப்பூ,பலூன்,ஊதி தித்திப்பு என
மருதாணி புள்ளிகள் மனம் மகிழ்த்த
வெட்க சிவப்புகள் வீதிவலம் வரும்

பாசப் பாத்திரங்கள் நிறைந்து
பலகாரங்களால் வழியும்
புன்னகை பூவிரிய
கைலாகு,சலாம் கட்டித்தளுவல் என்று
பன்பான உபசரிப்பில் பரிமாறல்
அலாதியின் பொருளாய் அரங்கேறும்

அறுந்த தூரங்கள் அருகாக
பிரியங்களின் பெயரால்
பெருநாள் நேர்ச்சைகள்
சில்லரைகளாய் சிதறிவிழ
உச்சத்தில் சந்தோசம் உயிர்த்தெழும்


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (6-Oct-14, 12:47 pm)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 97

மேலே