கிராமத்து காதல்

அத்துவான காட்டுக்குள்ளே..
அந்தி சாயும் நேரத்துலே..
அங்கே இங்கே பார்த்து வச்சு - என்னை
ஆத்மார்த்தம் தந்தவளே..!


வக்கனையா வாய் பேசி..
வாய் சவடால் கொஞ்சம் பேசி..
வாய் சிரிச்சு வந்தவளே - என்னை
வாய் பிளக்க வச்சவளே..!!


உள்ளத்து உவமை எல்லாம்..
உன்னோடு பேசிடத்தான்..
ஊருக்குல்லே ஓடிடாதே - இன்னும்
ஒரு முறை பாத்துக்கறேன்..


பொல்லாத "பூ"ச்சூடி..
புறம் சொல்லி போனவளே..
போயிட்டு வந்துரடி - நம்ம
புறம்போக்கு கொள்ளை பக்கம்..


உள்ளம் எல்லாம் வெடிக்குதடி..
ஊமத்தங்காய் போல..:
ஊர் அறிய கொதிக்க வச்சு - உன்னை
உலை சோறு திங்க வைக்க..!!!


பூட்டி வச்ச நெஞ்சுக்குள்ளே..
"பூ"ச்சாரல் அடிக்குதடி..
பூசைக்கு வந்துட்டு போ - மனக்
கோயிலுன்னு நான் வாரேன்..!


ஒவ்வொரு நாள் முதலாய்..
பார்த்து வைக்க ஆசை தாண்டி..
நித்தம் வா கொள்ளை பக்கம் - இந்த
சம்சாரி சிருச்சு வைக்க..!!


பாதம் பட்ட நாள் முதலா..
கொல்லையுந்தான் செளிக்குதடி..
கொள்ளை கொள்ள வந்துரடி - இன்னும்
கொஞ்சம் பேசி சிருச்சுக்கடி...


மேலும் ...


புத்தம் புது சேலை வச்சு..
சேலையில பூவ வச்சு..
சீர் வரிசை நான் தாரேன் - என்
சீதனமா வந்துரடி. (சீனி) .

எழுதியவர் : சீனி அலி இப்ராகிம் (6-Oct-14, 1:40 pm)
Tanglish : kiramaththu kaadhal
பார்வை : 209

மேலே