அன்னத்திடம் புலம்பல்
அன்னம்மாஉன்னைப் போல்
என் எண்ணம் ஒரு இடத்தில்
இல்லையம்மா....!!!!
இறக்கை கட்டிப் பறக்கின்றது
உள்ளேயம்மா வெளியில்
சொல்லவே வெட்கம் என்னைத்
தடுக்கின்றதம்மா...!!!!
நீரில் ஆடும் அல்லி இலையாட்டம்
கள்ளி என் உள்ளத்தில் அவர்
நினைவு ஆடுதடி...!!!!
தூது வந்த தோழியோ
குறும்புக் காரி தாலி ஒன்று
வருவது போல் வேலி ஒன்று
வருகின்றது உனக்கு என்று
சொல்லிச் சென்றாள்...!!!!
அன்னம்மா நான் இப்போது
என்னம்மா செய்யட்டும்...!!!!
தாலி அது தடையான வேலியா
இல்லை காவல் வேலியா அறியாத
பதுமையடி நான்....!!!!
பொன்னம்மா பாட்டி வீட்டுக்குப்
போனால் விடை அறியலாமடி...!!!
புலம்பல் கொஞ்சம் புகழாரம்கொஞ்சம்
எடுத்துரைப்பாரடி அவர் இளமைக்காலம்
பற்றி சுத்த வேராய்ப் போகுமடி எனக்கு...!!!
என்னைப் புலம்ப விட்டு நீ மட்டும்
அமைதியாக நிற்கின்றாயா அது சரி
நீ பொன்னம்மா பாட்டி இல்லையே
அன்னம்மாவாச்சே...!!!!
தேனோடு மல்லிகைச் சரம் கட்டி
நீர் சொட்டும் முடிமேல் சூடித்
தெருவோரம் போய் நின்றேன்...!!!
என் ஆசை நாயகனின் தேர் வரும் போது
ஓரக் கண் பார்வையிலாவது நான் தென்படவேண்டுமென்று..!!!!
ஏனோ நான் அறியேன் இன்று
மிஞ்சியது ஏமாற்றம் வஞ்சி நான்
வந்து புலம்புகின்றேன் உன்னிடம்
அண்ணமே உன் அமைதிக்கு என்ன
அர்த்தமோ அதையும் நான் அறியேன்...!!!!
நான் தொட்டால் நழுவுகின்றாய்
அணைத்தால் துவளுகின்றாய்
துரத்தினால் ஓடுகின்றாய் என்
உற்ற தோழியே நான் உன்னை விட்டுப்
போவது உமக்குத் தெரியுமா....!!!!
என்னவரும் நானும் வரும் வேளை
நீ இங்கே காத்திருப்பாயோ என்னை
வழி பார்த்திருப்பாயோ நான் அறியேன்
இனி என் கணவன்தான் என் தோழனடி
உனக்கு மீதம் சொல்லத்தேவையில்லையடி...!!!
ஐயோ எனக்கு வெட்கம் வெட்கமாக
வருகின்றதே இந்த அல்லி இதழ் போல்
என் இதயம் பூக்கின்றதே நான் உள்ளே
போகின்றேன் அன்னமே அன்னம்..!!!

