எனக்கு பிடித்த புத்தகங்கள் 0040

உன்னில் பித்து பிடித்தவன்
அழகன ஆடை உடுத்தி
உனை மெது மெதுவாக
உன் பக்கங்லெல்லாம்
எனது எச்சி தொட்டு விரலால் தடவி
அங்கமெல்லலாம் சுவாசமாக சுவாசித்தவன்
மகானானாலும்,
ரிசியானானாலும்
உனை தொட்டணைக்காதவறேயில்லை
மகா வீரனுக்கும்
ஆரம்ப துண்டு கோள் நீ தான்
உன்னால் பித்து பிடித்தவனுமுண்டு
தத்துவாஞானியுமுண்டு
மெல்லிய இரவில்
அல்லிமலராக அள்ளியணைத்து
மஞ்சத்தில் அமர்ந்து
சாளரத்தை அகற்றி
உனை படித்து மீட்டு கண்மூடித்தூங்கினால்
பொழுது இனிமையாய் விடியும்
என்னோடு நீயிருக்கும் கணமெல்லாம்
தனிமையை உணர்ந்ததில்லை