காதல் வந்தால்

காதல் வந்தால் !


உன்னை கண்ட ஒரு நொடி
என்னை இழந்த சிறு நொடி

பாதைகளில் கதை சொல்லும்
உன் பார்வைகள்

பகுத்தறிய முடியா -உன்
தேடல்கள்

சில்லென்ற சங்கீதத்தில்
சுருதி சேரும் -நம்
கூடல்கள்

சொல்வதையே திரும்ப சொல்லும்
நம் எதிர்பார்ப்புக்கள்
அதை கேட்டு பூரிப்படையும் இரு மனங்கள்

பாலைவனத்தில் பூத்த
பனிமலரின் வாட்டங்கள்
எதிலும் இல்லா நாட்டங்கள்

நம்மை நாம் தொலைத்த நாட்கள்
நாமறியா பல தூக்கங்கள்

கண்டதை விரும்பும்
கண் மூடித்தனமான காதல்

சிலிர்க்க வைக்கும் -உன்
கூந்தல் அசைவுகள்

சிந்தையை குலைக்கும் -உன்
சிந்தனைகள்

தொட்டதும் சுட்டுவிடும் -உன்
கடை விழிப் பார்வைகள்

கூட்டத்தில் இருந்தும் தனிமையை
உணரவைக்கும் உணர்வுகள்

அமைதியாய் பேசி
சம்மதிக்கும் உள்ளங்கள்

ஒப்பந்தம் இல்லா
உடன்படிக்கை சான்று

சோகங்களை சொந்தமாக்கும்
இனமறியா பந்தங்கள்

கை கோர்த்து திரியும்
கண்ணாபின்னா குழந்தைகள்

இரு விழிகளின் கேள்விகள்
விடையறியா விந்தைகள்

திருடும் திருடர்களின்
தித்திக்கும் ஆசையாய்
தில் தில் நிமிடங்களில்
தொலையும் ஏக்கங்கள்

உலகத்தை சுருக்கும்
விண்வெளி பிரிவுகள்

நாளை மறக்கும்
நாட்காட்டிக் காதல்

பிறர் சொற் கேளாத
பிடிவாதக் காதல்

நமை ஆளும் -நம்
உலகமே காதல் .........................

எழுதியவர் : keerthana (7-Oct-14, 6:13 pm)
Tanglish : kaadhal vanthal
பார்வை : 92

மேலே