முயல்வதில்தான் வாழ்க்கை
என்ன இந்த வாழ்கை என்று
யோசிக்க தோணும் நேரம்
குழந்தை முகம் நீயும் கண்டால்
கவலைகள் தூர ஓடும்
என்று விடியும் என்று விடியும்
என்றேதான் வாழ்க்கை ஓடும்
விடியல் என்பது முடிந்து போனால்
அது உன் இறந்த நாளாகும்
குறைகள் களைய நிறைகள் பார்
நிறைகள் அதிகரிக்க நீ
தினம் முயன்று பார்
முயல்வதில்தான் வாழ்க்கை
முடியாது போனால்
எது வேட்க்கை ???

