முதல் மழையாய் உன் பார்வை
நீயாக வருவாய் என
உன் வாசல் தேடி ....
என் மனம் தானாய் அலையும்
உன் காதல் எப்படி முடியும்
விறகாகும் வரை
விதைகள்தான் மரத்தின் கிளை
சருகாகும் வரை
சிந்திக்கும் மனம்தான் காதல்
உன்னால் வரும் வாழ்க்கை
வரும்வரை கரையும் காலம்
கானல் நீராய் ஒரு மாயம்
என் காதல் கார்காலம்
முதல் மழையாய் உன் பார்வை