உன்னைக் கண்ட நொடி
உன்னைக் கண்ட நொடி ..
பட்டாம்பூசிகள் பறக்கவில்லை ,
ஆயிரம்
மின்விளக்குகள் பிரகாசிக்கவில்லை ,
இதயத்துடிப்பும் அதிகரிக்கவில்லை ..
ஆனாலும் ,
ஏதோ ஒரு அமைதி ,
எதையோ அடைந்த ஒரு அமைதி ..
தேடாமல் கிடைத்த பொக்கிசமாய் ,
என் நிழலில்
நீ நிற்க ..
செய்வதறியாது ,
உன் எதிரே
நான் நிற்க ..
உன் கரம் பிடித்து
திமிரு கொண்டேன் ..,
என்னவள் ,
நீதான் என்று ...!