+விட்டதும் தொட்டதும் மனதிற்கு பட்டதும்+

புலப்பட்டுவிட்டது தமிழக முன்னேற்றம்
புறப்பட்டுவிட்டது உணர்ச்சியின் ஊர்வலம்

அகப்பட்டுவிட்டது கற்கால தவறுகள்
அடைபட்டுவிட்டது எதிர்கால கனவுகள்

உடைபட்டுவிட்டது அரசாங்க சொத்தெல்லாம்
உளிபட்டுவிட்டது கவிபாடும் எழுத்தெல்லாம்

பயப்பட்டுவிட்டது தவறிழைக்கும் மூளைகள்
பயன்பட்டுவிட்டது ஒருமுறையேனும் சட்டம்

சிந்தப்பட்டுவிட்டது ஏதுமறியோர் குருதி
உந்தப்பட்டுவிட்டது வாக்கில்காட்டுமோ உறுதி

மனதிற்குபட்டது மேற்கண்ட வார்த்தைகள்
படைக்கப்பட்டுவிட்டது விருந்துண்டு ஏப்பமிட....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-Oct-14, 9:12 pm)
பார்வை : 177

மேலே