தமிழா கற்றையாய் இரு

தமிழா... கற்றையாய் இரு....

உந்தன் இனமது தமிழினம் மறவா
நெஞ்சம் கொண்டிரு.. நட்புறவாயிரு...
எந்த தேசத்தில் எங்கு நீ வாழினும்
தமிழினம் காக்க என்றுமே குரல்கொடு!!!

ஒற்றைத் தமிழன் வாழ்வினைத் தவிரு
கற்றைத் தமிழனாய் வாழ்ந்திட பழகு
எவரெது செய்திடல் இயலும் உணர்வாய்
அநி யாயர்களின் நலங்கெடச் செய்வாய்!!!

உனக்குள் சண்டை பிரிவினை யாவும்
எதிரிக்கு எளிதாய் கிடைத்திடும் வெற்றி
விட்டுக் கொடுத்து வாழுதல் சிறப்பு - தமிழரை
விட்டுக் கொடுக்காமல் வாழ்வதுன் பொறுப்பு!!!

அதி காரம்பதவி கிடைக்குமென்றாலும்
மதிமயங்கியே நீயும் அடிமைபடாதே
தமிழரை வீழ்த்திடும் செயல்களுக்காக
தன்மானமிழக்கும் வினை புரியாதே!!!

தமிழர்க்குக் கேடு கண்முன் நடப்பின்
தட்டிக் கேட்டிடு... அதட்டியும் கேட்டிடு...
கண்டும் காணாமல் போவதென்றானால்
அடுத்த கேடு உனக்காகும் உணர்ந்திடு!!!

கற்றைத் தமிழன் மொத்தக் குரலும்
காலத்தில் ஒலிப்பது நன்மை பயக்கும்
அறிவாய் தமிழா இன்றே குரல்கொடு
ஒற்றுமை காத்திடு... உலகினை வென்றிடு

எழுதியவர் : சொ.சாந்தி (7-Oct-14, 9:46 pm)
பார்வை : 403

மேலே