இன்னோர் உலகம்

இதைப் போலவே
இருக்கும்
இன்னோர் உலகத்தில்
மனிதச்சிலை
வீற்றிருக்கும்
ஒரு கோவிலில்
கடவுளின் பிரார்த்தனை
இப்படித்தொடங்குகிறது .........

" எல்லாம் வல்ல
மனிதா .............
தயவுசெய்து
தயவுசெய்து
சகமனிதன்
துயர் துடை ! "

எழுதியவர் : குருச்சந்திரன் (7-Oct-14, 7:51 pm)
பார்வை : 97

மேலே