காமப்பேய்களே காமம் களைந்து காதல் உடுத்துங்கள்
காமப்பேய்களே உங்களுக்காய் என் மறுபிறப்பை வேண்டுகிறேன் ....!!!!
******************************************************************************************
காமப் பேய்களே...!!
காசில்லா கொடுமைக்காய் தான் வேலைக்கு வருகிறோம் அதை பயன்படுத்தி எமை படுக்கையில் வைத்து பார்க்க ஆசித்தால் உன்னை பாடையில் கிடத்தவும் யாம் தயார்நிலையில் தான் உள்ளோம்...
தீயில் இடப்பட்ட புழுவாக
இந்த நிமிடம் நகர்கிறது
இந்தககாமப்பேய்களால் ...!!
மறுபிறவி என்று ஒன்றிருந்தால்
.....கூர் கொண்ட வாளாய் பிறக்கவேண்டும்
பெண்ணின் சதை கிழிக்க துடிக்கும் உன் கரம் அதை
...துண்டுதுண்டாக வெட்டி வீசுவதற்காய் மட்டும் ...!!
.....பேயாக நான் உருமாறவேண்டும்
என் மாரணைத்த காரணத்திற்காய்
.....உன் இதயத்தை கிழித்து பட்ச்சை ரத்தம் குடித்து துப்பிவிட,...!!!
......உன் தாரமாய் ஒரு நாள் மட்டும் வாழவேண்டும்
சனியனே, பெண்மையிடம் நீ காட்டிய வீரம், அவள்காலடி தூசியின்அளவும் ......பெறாது போலும் உன்னை வக்கிரமாய் கீறிக்கிழித்து விட...!!!
......உன் பிள்ளையாய் ஒரு பிறவியில் இருக்கவேண்டும் உன் அடுத்தவள் என்ற உணர்விழந்து ,என்உடைகளை கிழித்து எறிந்ததற்காய் -பருவமாகி
......பெற்றவன் உன்முன் ஒரு நொடியேனும் ஆடைஅவிழ்த்து நின்றுவிட...!!!
..... ஆசைதான் உன் தாயென்று ஒரு முறை மாறிவிட
பிறப்பின் மதிப்பறியாது இன்று நீ நடத்திய அந்தரங்கத்தை இனி என்றும்
.....செய்யாதபடி உன்னைமலடாக்கி உன் இல்லாத மானத்தை வாங்கிவிட..!!
......ஆண்மகனாய் பிறப்பெடுக்க வேண்டுகிறேன்
மங்கையின் மாராப்பினை அவிழ்க்கும் போது இளித்த உன் நாவினை
.....முத்தம் என்ற ஆயுதம் ஏந்தி அறுத்து எறிந்துவிட
.......உன் வீட்டு நாயாக பிறவி எடுப்பேன்
மனிதபிறவியில் நீ நாயாக நடந்துகொண்டதற்கு
.......நட்டநடு வீதியில் உன் குரல்வளையை குதறிஎடுக்க...!!!
.......உன் தேகமாய் மற்றோர் பிறப்பெடுக்க ஆசை
மானகெட்டவனாய் மஜா செய்து திரியும் - உன்
........உடலை விட்டு அழுகிப்போய் மண்ணில் உதிர்ந்து விட...!!!
.....உன் படுக்கை அறையாக மாறவும் ஆசை
இன்று பெண்மையை பொறுக்கித் தின்னும் - உன்
.....இன்பஇரவுகளை நரக வாயிலில் கொண்டு போய் சேர்ப்பதற்காய்...!!!
.......இறுதியாக நானும் ஒரு காமுகனாய் பிறக்க ஆசை
காமவெறியோடு என் தேகம் திருடிய - உன்
........உடல் முழுதும் திராவக மழைவூற்றி முழுதாய் பொசுக்கி விட...!!
....உன் இறுதி ஊர்வலத்தில் வலம்வரும் பேரனாய் வரஆசை
இன்றெனை படுக்கையில் பணயமாய் பந்தாடும் உன்னை
....உயிரோடு எரித்து கொள்ளி வைக்க ...!!!
.....வெடிமருந்தாய் மறுபிறவி வேண்டும்
உடல் வெறி தலைக்கேறித் திரியும் -உன்
....தேகமெங்கும் பரவி ஒரு நொடியில் உன்னை சிதறச் செய்துவிட...!!!
திருந்தி விடு ,
திமிர் வேண்டாம் ,
திசைமாறு ,
திருப்பம் வேண்டாம் ,
கற்றுக்கொள் ,
காமம் விடுத்து.,
[உணர்ந்த பின் பகிர்ந்து கொள்ளுங்கள் உங்கள் வாழ்வில் பெண்களுக்கு பாதுகாப்பு உண்டென்றால் ]
by
cathy,