தமிழகமே இனியேனும் விழித்துக்கொள்

மூவாறு ஆண்டுகள் நகர்த்தி
வானில் நட்சத்திரங்கள்
ஒரு சுற்றின் முடிவில்
வழங்கியது நல் தீர்ப்பு !!

வாங்கிய வாய்தாவெல்லாம்
வட்டியோடு வாட்டுதிப்போ
தனிமை சிறை...!
வக்கலாத்து வாங்க போன
வக்கீலெல்லாம் வாயடைத்துப் போனாரே !!

தந்த தீர்ப்பு அநீதி என்று
நீதியை குறை சொல்லும்
தவறே செய்யாத தர்ம தலைமையுந்தான்
நீதி கேட்டு போராடி வீதியிலே
தீ வைத்து அநீதி செய்யும்
அற்பக் கூட்டம் பாருங்கடா !!

தந்த தீர்ப்பு தவறானால்
தர்ம வழியை பின்பற்றாது
தர்மம் பற்றி உரைக்குதடா
காவிரியை எடுத்துக்கொள்
எம் தாயை கொடுத்துவிடு !

தமிழகத்தை காக்கும் பொறுப்பை
இவனிடத்தில் கொடுத்தவன்
வெட்கி தலை குனிய வேண்டாமோ
ஒருவர்க்காக ஊரை விற்கும் கூட்டமடா !

ஆட்சியாளர் தாமென்ற
அகந்தையிலே திரியுதடா
நாளையே தீர்ப்பு மாறக்கூடும்
தீயிட்ட பொருளும்
சேதம் செய்த உயிரும்
திரும்பத் தர உன்னால் முடியுமா ?

ஏனிந்த ஆர்ப்பாட்டம்
சட்டம் தன் கையில் என்பதாலோ
வலுக்கட்டாயம் செய்து மிரட்டி
கதவடைப்பு செய்து பின்
தானே முன்வந்தார் என்பதுதான்
நீ போற்றும் சத்தியமோ ?

சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து
மேலும் ஓர் சாட்டையடி வேண்டுமோ?
மக்களை காக்கும் பொறுப்பை ஏற்று
மக்களை அச்சுறுத்துதல் முறையோ ?
இப்போது தெளிவாய் புரிகிறது
தவறேதும் செய்யா தலைமையில்லையென்று

அமைதியான வழியில் வென்றிடாதோ நீதி!
அலைகழிக்கும் மக்களெல்லாம்
அதுபோலே செயல்பட்டால்
ஆட்சியாளர் நிலை யாதென அறிவீரோ !

பகுத்தறிவு இல்லா மானிடமோ
பக்திகாட்ட இது தேவாலயமோ?
எத்தனை கோடி சுரண்டினாலும்
சுரனையற்ற ஜென்மங்களே !
உங்களை சுரண்டிய பணம் இதுவென்று
இப்போதாவது உணருங்களே!

எவன் அடிக்கவில்லை கொள்ளை
இதுவா பேச்சு?
எவனடித்தாலும் உனக்கே வீழ்ச்சி !
எவன் வீட்டு சொத்தை
எவன் உரிமை கொண்டாட
எழவேண்டாமோ மனதில் வினா?

எரியிற வீட்டில் பிடுங்கியவரை லாபம்
அதற்காக உன் வீட்டை எரித்தா
அவனுக்கு கொடுப்பாய்
சிந்திக்க வேண்டாமோ !

தவறேதும் செய்யா
தர்மதேவதை அமைதிகாக்க...
தண்டச்சோறுக்கு தன்மானம் கொதிக்குமோ?
எலும்புக்கேங்கிய நாயாட்டம்
சில்லறைக்கு துணைபோய்
தெருவினில் நிற்காதே பின்
சிறு கோவணமும் மிஞ்சாதே !

எழுதியவர் : கனகரத்தினம் (8-Oct-14, 1:36 am)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 87

மேலே