தூரத்திலே வாழ்கின்றோம்

தூரத்திலே வாழ்கின்றோம்

பாலைவனத்தில் பாதம் வைத்த~பாவி
பச்சை தண்ணீருக்கே கஸ்ரப்படும் வேள்வி.....
வீதி ஓரம் புழுதியின் கோரம்....
கொளுத்தும் வெயிலில்
உருகும் தேகம்....
சொந்த ஊரில் கூட
தெருவில் இருந்ததில்லை......
நாடு கடந்து வந்து இங்கே நாதி இல்லை
இரவு என்ன?
பகல் என்ன?
வேலைதான் எங்கள் வேதம்.
கஷ்டத்துக்காக கத்தார்/கட்டார் வந்து
கண்களிலே கண்ணீர் கொண்டு
சொந்தங்களை தொலைவில் நின்று
தூரத்திலே வாழ்கின்றோம்.....
எம் உறவுகளின் நினைவுடனே
தூங்கமல் வாடுகின்றோம்

எழுதியவர் : உதயகுமார் சஜீவன் (9-Oct-14, 3:08 pm)
பார்வை : 99

மேலே