மோக முள்

ஜன்னல் திறக்கும் தென்றல்
ஆடை கலைத்தால்
இது adult only கவிதை

வேண்டாம் என்றாலும்
விடியல் வந்துவிடும்
விட்டில் பூச்சிகளின்
சத்தத்தின் நடுவே

அதற்க்கு முன்
அவசரமாய் அறை கதவு
தாழ்ப்பாள்களை தாழிட
இன்றைக்கு மட்டும் இரவு
இன்னும் கொஞ்சம் அழகாய்
என்முன்னே நீ

உன் கண்களுக்கு காந்த சக்தியோ
காந்த புலம் அறியும் முன்
ஈர்த்து கொண்டது இருவரையும்

முத்த அழுத்தத்தில்
ஒரு கன்னம்
சிவந்து நிற்க
மறுகணமே சிவக்க வைத்தாய்
மறு கன்னத்தையும்

மூச்சு முட்டி
சில முத்தங்கள் தடைபட
சிறு அவசரத்தில்
அருத்தெரிந்தாய்
என் சட்டை பொத்தானை

உன் கூந்தல் முடிகள்
என் மடியில்
படர்ந்து கிடக்க - உன்
பாவாடை நாட
அதன் இறுக்கத்தை இழந்தது

உடை கலைத்ததால்
இறுக்கத்தின் இடையில்
உன் இடை மட்டுமே

மேலாடை துறந்த
முனிவராய் நான்
நீரோடை வளைத்த
நாணலாய் நீ

நாணங்கள் இனி இல்லை
அச்சம் வேண்டாம்
வெட்கத்தில் இதற்குமேலும்
உன் கன்னம் சிவக்காது

என்ன நடகின்றது என்று
கண்கள் பார்க்க நினைத்தாலும்
இமைகள் அனுமதிக்கவில்லை

இதற்குமேல் என்ன சொல்ல
அந்த பழைய படத்தில் வருவதுபோல
பூக்களை ஆட்டி கவிதையை முடிக்கிறேன்...

எழுதியவர் : பாலமுதன் ஆ (11-Oct-14, 9:31 pm)
Tanglish : moga mul
பார்வை : 1186

மேலே