என் செல்லமே
உனக்கு படுத்து தூங்குவதற்கு
மெத்தை எதுவும் கிடைக்கவில்லையா??
என் மனம் தான் கிடைத்ததா??
உனக்கு உண்பதற்கு
என் நினைவுதான் கிடைத்ததா??
உணவு எதுவும்
உன் வீட்டில் இல்லையா???
உனக்கு அசை போடுவதற்கு
மலரும் நினைவுகள் ஏதும் இல்லையா?
என் தொடர்பான சம்பவங்கள்தான்
நினைவில் நிற்க வேண்டுமா??
இப்படியே
என்னை எத்தனை காலம்
கொல்லவேண்டுமென உத்தேசம் செய்துள்ளாய்??
மனத்தால் நெருங்கவும் விடமாட்டாய்...
சிந்தையால் விலகவும் விடமாட்டாய்...
நான் என்ன செய்ய வேண்டும்??
நீயே சொல் என் செல்லமே.......