நூறு நாள் வேலை

எதிர்வீட்டு அம்மா கூட கேலி பேசும்
கலெக்டரம்மா வேலைக்கு கெலம்பிடிச்சின்னு
கேட்காத மாதிரி சிரிச்சிட்டு போவேன்

வயத்த தோண்டும் பசிக்காக
மண்ண தோண்டி போடுரோங்க

மழை வருமோ
குழி நிறையுமோ தெரியாதுங்க

என் புள்ளைங்களும் ஒருவேள
ருசியோட பசியாருமிங்க
என் மனசும் நிறையும்
அது போதுமிங்க

எங்கள ஏதோ ஒரு கடைகோடியுல
விட்டிட்டு உயர்ந்து நிக்குற இந்த உலகத்துக்கு
அந்த மனுஷன் குடிச்சி மீத்தி
கொடுக்கும் காசு எந்த மூலைக்குங்க

இவங்க தின்னு தொடச்சி போட்டதெல்லாம்
வீதி முழுக்க பறந்து திரியுமிங்க
அதையும் அள்ளி போடும் எங்கள
கேவளமா நின்னு வேடிக்க பாப்பாங்க

பத்து ரூபா இருந்தாலும்
மகளுக்கு நோட்டு வாங்க ஆகுமிங்க
நாளுக்கு நூறு ரூபா கிடைக்குதே

உறவை கூட்டி அறுசுவை சோறு
போட தேதி பாக்கும் இவங்க
உசுரு போகும் நிலைய பாத்தும்
ஊசிபோனாலும் ஒருகை அள்ளி தராதவங்க

எதை கட்டி எதை இழுத்தா என்னங்க
இனியும் இழக்க உசுரும் முழுசா இல்ல
இனியும் கொடுக்க மானமும் மிச்சம் இல்ல

உயர போகும் எங்களுக்கு
தாழ்ந்த மனசுக்காரங்கள பத்தி பேச்செதுக்கு
எனக்கு பொழப்பிருக்கு நான் போறேங்க

எழுதியவர் : மணிமேகலை (11-Oct-14, 11:15 pm)
Tanglish : nooru naal velai
பார்வை : 152

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே