மவுன தத்துவங்கள்

வாழ்வின் பொருளை நன்கறிவேன் - நான்
வளரும்போழுதே நிழல் தருவேன்......

நிமிர்ந்து நடக்கும் மானுடமே
நீயும் என்னை மிதிக்காதே.......உன்

விழிக்கு தெரியாத சிற்றெரும்பு என்நிழலில்
விரும்பி உறங்குவதை உணர்ந்து கொள்வாய்....

வளர விடாமல் எமைக் கொல்லும் நின்
வஞ்சக நெஞ்சை உடன் கொல்வாய்......!!

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (11-Oct-14, 11:57 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 97

மேலே