பிறந்த நாள் வாழ்த்து

அன்பு மகளின் பிறந்தநாள் இன்று
ஆசையுடன் வாழ்த்த ஆவல் கொண்டேன்

கவி எழுத கவிதையில் லயித்து நிற்க
ரசனை உள்ள வரிகளில்
கவி எல்லாம் காத்து நிற்கும்
வாழ்த்துரைக்கும் கவி அவளை

எட்டுத் திக்கும் கவி மணக்கும்
ஏழிசை வாணி தரும் திருநாளாம் இன்று

அவள் பிறந்த நன்னாளில்
பெற்றவர்கள் உற்றவர்கள் கற்றவர்கள்
வாழ்த்திடவும் மகிழ்ந்திடவும்
ஆண்டவனின் அருள் வரங்கள்
கிடைத்திடவும் வாழ்த்துகிறேன்

உன் இனிய பிறந்த நாளில்
என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்
உனக்கே உனக்கு.

HAPPY BIRTHDAY TO DEAR EZHISAI VAANI

எழுதியவர் : பாத்திமா மலர் (12-Oct-14, 12:07 am)
பார்வை : 309

மேலே