ஆசிரியருக்கு சமர்ப்பணம்

அழகாய் வரிசையில் அமர்த்தி அன்பாய் "அமைதி" என்று அதட்டி

குறைவில்லா குறும்பு செய்யும் பிஞ்சுக் கரும்பின் கரம் பிடித்தே

"ச்சீ.." போட்டு திட்டிவிடாமல் "அ" போட கற்றுத் தந்தாய்..




ஒரு பென்சில் திருடுவதும் தவறென்று எனுள் புகட்டி

சிறுபிள்ளை சண்டை விளக்கி சமத்துவங்கள் எம்முள் நுழைத்தே

புகழ், கர்வம்- போதை என்ற போதனைகள் நிதம் தந்தாய்




சிறு சொல்லிலும் மிரண்டுவிடும் மழலையர்கள் தமை திரட்டி

மாறுவேடப் போட்டி என்று பாரதியார் வேடம் புனைத்தே

"அச்சமில்லை" என்று கூறி ஒட்டு மீசை முருக்க நெகிழ்ந்தாய்




பொறுமையோடு விடை திருத்தி பள்ளி முடிந்தும் நேரம் ஒதுக்கி

பொருள் சேரா ஐயப்பாட்டின் கேள்விகளுக்கும் பதில் தந்தே

யாம் சிகரம் ஏறிடவே நின் அறிவுத் தோல் ஈன்று மகிழ்ந்தாய்




பெருமையாய் இன்று நிற்கின்றேன் பல ஆயிரம் சம்பளமும் பகட்டான மாளிகையும் பெறப் பட்டே..

என் தலையெழுத்தை மாற்றிவிட நீர் தந்த பயிற்சியின் பலனால் பெற்ற கையெழுத்தை கையொப்பமாய் இட்டே..

எழுதியவர் : Karunabalan (12-Oct-14, 6:07 pm)
பார்வை : 348

மேலே