கல்லூரி ஆசிரியருக்கு சமர்ப்பணம்

புல் பூண்டு நிறைந்த எம் புஞ்சை மனநிலம் உழுது

கல்வி விதை விதைத்து விளைச்சல் சேர்க்கும் உழவன் நீ..




பட்டறிவும், கருத்தரங்கும்- பாடல் ஆடல் கேலியோடு

பகிர்ந்தெமக்கு அளிக்கின்ற பண்பான தோழன் நீ..




பல எண்ணம், செயல்கள் என்று வேறுபட்ட எம்மை தேற்றி

உற்ற பாதை வகுத்து தரும் தரமான தலைவன் நீ..




கிண்டல் பேசுக் கேலிப்பாடல் எந்த தொல்லை தந்தாலும்

களை அற்ற கல்வி தரும் கனிவான கடவுள் நீ..




காட்டாற்று வெள்ளமாம் இக்கல்லூரி வாழ்வில் எம்மை

கலமேற்றி கரை சேர்க்கும் கைதேர்ந்த மீகாமன் நீ..




எச்சிகரம் சேர்ந்திடினும் எந்த நிலை உயர்ந்திடினும் உமைப் போன்றே

கனம் சேரா மனம் கொள்ள அருள்வாய் நீ!!

எழுதியவர் : Karunabalan (12-Oct-14, 6:24 pm)
பார்வை : 329

மேலே