நீ என் உயிராய் வேண்டும்
உன் முகம் பார்த்து கண் விழிக்கும்
ஒரு வரமே வேண்டும் ! - தினம்
உன் நகம் சுவைத்து தீரா
என் பசி போக்க வேண்டும் !
பளபளக்கும் உன் இதழில் நான்
மது அருந்த வேண்டும் !
மறவாமல் என் கை விரலை நீ
சுவைக்க வேண்டும் !
மயிலிறகாய் என் மார்பில் நீ
துயில் கொள்ள வேண்டும் !
உன் குளிர்கால கதகதப்பாய் நான்
இருக்க வேண்டும் !
தினம் இரவில் உனை மூடும்
உடை நானாக வேண்டும் !
நான் தள்ளாடும் நேரத்தில் உன்
துணை ஒன்றே வேண்டும் - என்
மயிர் நரைக்கும் நேரத்தில் நீ
என் உயிராய் வேண்டும் !
தலை சாயும் நேரத்தில் உன்
மடி மட்டும் போதும் !