ஏற்க முடியா மனநிலை
மாமரத்து கிளையினிலே
கயிறு கட்டி வீட்டிலுள்ள
பலகை எடுத்து ஊஞ்சலடினோம் ..
வேப்பம் காய் துணைக்கொண்டு
கீறி கிழித்து கையில்
எழுதி மண்ணிட்டு மகிழ்ந்தோம் ..
வீட்டு திண்ணையையே மேடையாக்கி
ஆடலும் பாடலும் நடித்தும்
இனிதாய் களித்தோம் ..
காலத்திற்கு ஒரு விளையாட்டு
தாயமும் ,நொண்டியும், பல்லாங்குழியும்
என பொழுதை கழித்தோம் ..
எப்போதும் பலர் கூடி
ஒருமித்து விளையாடி
அப்படியே இருந்துவிட்டோம் ...
இன்று கணினியோடு விளையாட
நம்சந்ததி பழக்க அவர்களுக்கு
எல்லாம் இயந்திரமாய் தெரிகிறதோ ?
எப்போதும் ஜெயிக்கும் எண்ணம்
ஓங்கியே தோல்வி தாங்க
முடியாமல் செய்துவிட்டோமோ?
- வைஷ்ணவ தேவி