மேகத்தின் விளையாட்டு

எங்கிருந்தோ விரைவாய்
வந்த கருமேகங்கள்
ஒன்றோடு ஒன்று கூடி
கலகலவென சிரித்துவிட்டு
காற்றை அழைத்து
காதில் சேதி சொல்லி
வந்ததைவிட விரைவாய்
கலைந்தோடியது
காற்றே அடி காற்றே
சற்று நில்
மேகமகள் கூட்டம் கூடி
வேகமாய் எங்கோ ஓடி
மறைந்தனளே ஏனோ ........?
என்றேன்
காற்று அவள் மெதுவாய்
வந்து
காதினிலே கிசு கிசுவென்று
சொன்னது யாதென தெரியுமா.....?
மனிதர்கள் என்னை ஒழிக்க
மரங்களினை வெட்டியே அழிக்க
நான் மட்டும் மழைத்துளி எப்படி கொடுக்க
இவர் துன்பம் வேடிக்கை பார்க்க
சிறுநேரம் வேடிக்கை காட்ட
கூடி நான் மகிழ்ந்தேன் தோழி
விரைந்து செல் இதுதான் செய்தி
என்று மேகமகள் சொன்னதாய் சொன்னாள்
கேட்டதும் என்னுள் சோகமவள் குடிதனை கொண்டாள்