உயிர்மெய்

உயிர் எழுத்தை
உள்ளடக்கிய
என் காதல்

மெய்யெழுத்தை மொய் எழுதும்
உன் பார்வை

இரண்டையும்
கோர்க்க
நினைக்கும் பொழுதெல்லாம்
தடுக்கும் ஆயுத எழுத்தாய்
உன் கோபம்

பொருள் படாமலே
நீளுகிறது

என்
காதல்

எழுதியவர் : ந.சத்யா (15-Oct-14, 1:49 pm)
Tanglish : uyirmey
பார்வை : 76

மேலே