மாற்றுத் திறனாளிகள் ஏற்றம் காணட்டும்

மாற்றுத் திறனாளிகள் ஏற்றம் காணட்டும்...
==========================================

கையிருந்தும் காலிருந்தும் அவயங்கள் யாவும்
குறையின்றி அத்தனையும் இருந்தும்...இருந்தும்...
கற்பதற்கும் தொழில் புரிவதற்கும் எளிதாமே -இல்லை
அவயக் குறையானோர்க்கு அன்னாளினில் இருளாய்!!

தொழில்நுட்ப வளர்ச்சியிலே அபூர்வ கணினியாம்
மனிதனோடு பேசும் நாளில் பலனுண்டாம் - மாற்றுத்
திறனாளிகளை முன்னேற்ற படிகளில் ஏற வைத்தே
வகையாய் இணையதளங்களும் இன்னாளினில் ஒளியாய்!!

வசதிகொண்டோர் வாழ்வில் ஊனக் குறைகள்
உடைத்தேதான் வாழ்கின்றார், நவீனம் யாவும்
இல்லம் குடிபுக வர்த்தக வியாபாரங்களும்
இருந்த இடத்தினிலே ஏகபோக இலாபங்களாய்!!

என் செய்வார் ஏழைமாற்றுத் திறனாளிகளெல்லாம்?
உண்பதற்கே ஒருவேளை சோற்றுப் பஞ்சம் - அவர்க்கு
கணினியும் அதன்வழி பயிற்சியும் கண்டிட காசும்
யாரோ அளிப்பார் பாவம் ஒரு வழியறியாதவர்!!

எத்தனையோ திட்டங்கள் வகுத்துமென்ன - அரசும்
வகுத்திடவே பலன் பெறுவார் மாற்றிடலாம்
மாற்றுத் திறனாளியெல்லாம் மகத்துவம் பெறும்வகையில்
இலவசமாய் கணினியும் பயிற்சியும் அளித்தேயவர்க்கு!!

இல்லத்தில் கல்வி கற்றிடவும் இணையதளங்கள் பற்பல
உருவாக்கி ஊனமுற்றோர் வாழ்வை வளமாக்கி அரசும்
மாற்றியமைக்கட்டும் ஏழைமாற்றுத் திறனாளிகள் எவரும்
ஏற்றமிகு எதிர்காலம் கண்டே இன்பத்தில் உய்த்திடவே!!

===========================================================================================
இப்படி ஒரு கவிதையை எழுத தூண்டிய ஜெபகீர்த்தனாவிற்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுதியவர் : சொ.சாந்தி (15-Oct-14, 10:27 pm)
பார்வை : 323

மேலே