நீ

தீவு!
இப்படி தான் இருக்கவேண்டும்
என்பதில்லை...
எப்படியும் இருக்கலாம்!
சிறியதாய்,பெரியதாய்
மரங்களோடு,மரங்களின்றி
மனிதர்களோடு,மனிதர்களின்றி

வாழ்வும் அப்படித்தான்..
வரையறை கிடையாது,..
வரையறுப்பவர்
வாழ்வதே கிடையாது!..

இரசிப்பவனுக்கே
வாழ்க்கை சொந்தம்!
இன்பம்,துன்பம்..
பார்க்கும் விதத்தில் தானே தவிர
பாவ புண்ணியத்தால் அல்ல!

கற்றுக்கொள்ள ஒன்றுமில்லை...
காண்!
கேள்!
சுவை!
தொடு!
உணர்!
இது போதும்!!

செல்வம் தேட
பலவழி...
செல்வம் தேடு,
செலவழி!...

நேற்றைய தவறுகள்,சரிகள்
இரண்டும் மற...
இன்றையில் கொஞ்சம் தீவிரமாகு!
நாளை வந்தால்தான் உண்டு!!

சிரித்துக் கொள்!
அழு!
சிந்தி!...மீண்டும் தொடர்!

உறவுகள்,
எதிர்பார்ப்பு தவிர்!

கடவுள்,
இரசிப்பவன்..
இரசிகரை இரசிப்பவன்
இரசி!
வலியையும்..வளத்தையும்...

நட!
பயணம் விரும்பு!
பழகிப் பார்!

இயன்றதை படை!
இயலாதவை உடை!
மற்றவர் ஒட்டி கொள்ளட்டும்!

கட்டுப் படாதே!,
கட்டுப் படு!
முழுமனதாய்..!!

............
.....................
....................

இனி நீ எழுதலாம்
கவிதையில் உண்மை....!!

எழுதியவர் : அபி (16-Oct-14, 10:30 am)
பார்வை : 144

மேலே