வணங்குகிறேன்
எழுபதுகளின் இடையிலே
அதை விட்டு வெளி வந்தேன்..
நல்லொழுக்கமும் நேர்மையும்
ஆங்கிலவழி கல்வியும்
அதனிடையே அழகு தமிழும்
அள்ளிக் கொடுத்தது..
என்னுடைய பள்ளி!
குயில் பாட்டு தந்த உயர் பாரதியும்
தமிழ் சங்கினை முழங்கிய பாரதிதாசனாரும்
அன்பு வடிவாம் அருள் அன்னையும்
அகிலம் போற்றும் அரவிந்தரும்
இருந்து ஏற்றம் தந்த புதுவையின்
மத்தியில் அமைந்த அப்பள்ளியே
என் வாழ்க்கை பள்ளியில்
நான் உயர்ந்திட அடித்தளமே!
..
வணங்குகிறேன் ..
நூற்றெழுபது ஆண்டு வயதுடைய
பெத்தி செமினேர்
என்னும் அந்த குருகுலமே.. !
என் எல்லா உயர்வுக்கும் அடியுரமே..!
..
என்னில் ஆழமாய் பதிந்திட்ட
உன்னை எங்கேனும் பதிந்திட
ஆசைகொண்டேன்..
என் ஆத்ம திருப்திக்காக!
நன்றி உணர்வினாலே!
பதிவு செய்கிறேன் ..
எழுத்து வலைதளத்தின் உதவியாலே ..!
அன்பு நண்பர்கள் அவர்தம் பார்வைக்காக!