மாமனும் மைத்துனனும் சமரே - ஆன்மிகம் ஒப்புமை சிவனும் - திருமாலும் - முதலில் சிவன்

மாமனும் மைத்துனரும் சமரே !
ஆலாலமும் சிவபெருமானும்
மைத்துனன் மைத்துனனை முடியிற் கொண்டாய் *
மைத்துனன் மைத்துனன் போல் மையற்கலை வளரக்கண்டாய்
மைத்துனன் கண் பறித்தாய் – மருகன் தலை அரிந்தாய் ***
மைத்துனன் எதிரி காத்தாய் - மருகன்தனை எரித்தாய் ****
மைத்துனனை உழச்செய்தாய் - மருமகளை சிறை கொண்டாய் ***** ( * வராகம், கங்கை)
மருமகளை மணம் கொண்டாய் - மைத்துனனை மாமன் செய்தாய்.
மருமகளை மனைவியிடம் பொருதச் செய்தாய்- சமரசம் செய்யாய்
விடை காணாய் - விடையறியாய் -விடை கொண்டு
சுடும் காடடைந்தாய் -மெய்யுணராவகை சடை வளர்த்தாய்
திருவோடு கொண்டாய் - இரந்துண்டாய்
பித்தன்போல் நீறணிந்தாய் - துகிலணியாய்
வெங்கரிதோலுடைத்தாய் - பைந்நாகம்தனை அணிந்தாய்
மனையின்றி மலையடைந்தாய்....
மைத்துனன்பாற் கண்ணூறு கொண்டு -முனிபத்தினியர் முன் துகிலணியா
முன்சென்றனையோ? மலைமகள் கண்ணுற அச்சத்துடன்
ஆலாலம் உண்டனையோ?ஆலம்கீழ் அமர்ந்தனையோ ?
அன்றி
பதினாயிரம் பெண்பெற்ற மைத்துனனை மிஞ்சி
பெண்டிர்தாம் பின்தொடர-
மைத்துனன் நிறம்பெற ஆலாலம் உண்டனையோ?
அண்ணண் தன் குணமறிந்த மலைமகள்தான்
நின் கழுத்தினை நெருக்கினளோ ?
நின்னனை நெறிப்படித்தினளோ ?
*சந்திரன்),(*** கிருஷன ,ப்ரகும்ஹா),(**** பானசுரன் ,மன்மதன்),( ***** வராகம், கங்கை)
2. திருமால் அடுத்து தொடரும் (நிந்தை துதி)
Narasimhan.V