narasimhan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : narasimhan |
இடம் | : Hosur |
பிறந்த தேதி | : 24-Apr-1960 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 12-Oct-2014 |
பார்த்தவர்கள் | : 64 |
புள்ளி | : 6 |
வளைய வட்டத்தினுள்
நேர்கோடுகள்
நிமிர்த்தலின் விதி
வளைவு!
வெற்றிடத்தின் வெளி
நிறைவுகள்
நிறைத்தலின் விதி
வெற்று!
புள்ளியின் விரிவு
பூதம்
மறைத்தலின் விதி
புள்ளி!
சூனியத்தின் சூட்சுமம்
மிகுதி
இருத்தலின் விதி
சூனியம்!
உலகம் உயிர்களின்
தொகுதி
உயிர்த்தலின் விதி
உலகம்!
ஆக்கம் அழிவின்
பகுதி
அழித்தலின் விதி
ஆக்கம்!
ஓசை மெளனப்
புரட்சி
வார்த்தையின் விதி
ஓசை!
தூக்கம் மரணத்தின்
ஒப்பு
மரணத்தின் விதி
தூக்கம்!
கண்ணாடி முன்னின்று பார்க்குதோ
கண்ணடி படுமென்றும் அறியாதோ !
முன்னாடி தேங்கிட்ட தண்ணீரிலே
முன்னழகை காண்கின்ற மரங்களே !
வரைந்திட்ட ஓவியமாய் காட்சியிது
வருடிடும் நெஞ்சங்களை மாட்சியிது !
எழில்மிகு இயற்கைக்கு சாட்சியிது
ஏழிசை ராகம்கலந்திட்ட கானமிது !
கனத்த மனத்தையும் கரைத்திடும்
காணும் இதயங்களை குளிர்த்திடும் !
கண்டு ரசிப்பவரையும் மயக்கிடும்
கண்களில் மகிழ்ச்சியும் பொங்கிடும் !
இயற்கை அழகும் குறைகின்றதே
வயலும் பசுமையும் மறைகின்றதே !
வளர்ந்த மரங்களும் வெட்டுப்படுதே
தளர்ந்த மனங்களும் வேதனைப்படுதே !
இயற்கையின் பரிசன்றோ மரங்கள்
இதயமுள்ள மானிடரே சிந்தியுங்கள் !
பலன்
தாழ்வுணர்ச்சி கொண்டவனுக்கு
அருவி என்பது
நதிகள் செய்து கொள்ளும் தற்கொலை
தன்னம்பிக்கை உடையவனுக்கு
அதே அருவி என்பது
விழுந்தாலும் எழுந்து ஓடும்
விடா முயற்சி
என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?
தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !
பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !
உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?
யோசித்து சொல்கிறேன் !
தோழன் என்று சொல்லி
தோ
மாமனும் மைத்துனரும் சமரே !
ஆலாலமும் சிவபெருமானும்
மைத்துனன் மைத்துனனை முடியிற் கொண்டாய் *
மைத்துனன் மைத்துனன் போல் மையற்கலை வளரக்கண்டாய்
மைத்துனன் கண் பறித்தாய் – மருகன் தலை அரிந்தாய் ***
மைத்துனன் எதிரி காத்தாய் - மருகன்தனை எரித்தாய் ****
மைத்துனனை உழச்செய்தாய் - மருமகளை சிறை கொண்டாய் ***** ( * வராகம், கங்கை)
மருமகளை மணம் கொண்டாய் - மைத்துனனை மாமன் செய்தாய்.
மருமகளை மனைவியிடம் பொருதச் செய்தாய்- சமரசம் செய்யாய்
விடை காணாய் - விடையறியாய் -விடை கொண்டு
சுடும் காடடைந்தாய் -மெய்யுணராவகை சடை வளர்த்த
நிறக்குருடாகுமோ?
வெளிநாட்டில் பதுக்கப்பட்ட
கருப்புப்பண பட்டியல்
பகிரங்கப்படவேண்டுமென்று
எதிர்கட்சியாய் ஏககுரலில்
ஆளும் கட்சியானபி்ன்
பட்டியல் பெற்றபின்
நிறக்குருடானதோ
பட்டியலே வெண்மையாகுமோ?
நீங்கள் முணுமுணுப்பது தெரிகிறது
'உங்களுக்குத்தான் அடிக்கடி செலக்டிவ் அம்னீஸியா
என்பது எங்களுக்கு அத்ததுப்படியான ஒன்றுதானே !'
மாமனும் மைத்துனரும் சமரே !
ஆலாலமும் சிவபெருமானும்
மைத்துனன் மைத்துனனை முடியிற் கொண்டாய் *
மைத்துனன் மைத்துனன் போல் மையற்கலை வளரக்கண்டாய்
மைத்துனன் கண் பறித்தாய் – மருகன் தலை அரிந்தாய் ***
மைத்துனன் எதிரி காத்தாய் - மருகன்தனை எரித்தாய் ****
மைத்துனனை உழச்செய்தாய் - மருமகளை சிறை கொண்டாய் ***** ( * வராகம், கங்கை)
மருமகளை மணம் கொண்டாய் - மைத்துனனை மாமன் செய்தாய்.
மருமகளை மனைவியிடம் பொருதச் செய்தாய்- சமரசம் செய்யாய்
விடை காணாய் - விடையறியாய் -விடை கொண்டு
சுடும் காடடைந்தாய் -மெய்யுணராவகை சடை வளர்த்த
இந்த கவிதை அவர் மறைந்த 10 நாட்களுக்குள் எழுதியது
வாலிக்கு இரங்கற்பா
அரிதார கலைஞரை
அவதாரப் புருடராக்க
அழகான சொற்கள்கண்
அலங்கரித்து - அணிந்துரைத்த
அரங்கராசா !
இனிதானப் பாட்டிற்கும்
இத்தலைமுறை பாட்டிற்கும்
இசைப்போன் இவனைத்தான்
இனிதாய் இசைவ - இசை பொருந்த
பண்ணிசைத்தாய்-பாட்டிசைத்ததாய்
காவியமும் காப்பியமும்
கலைஞரோடு உரை பேசும்
காவலனும் கொற்றவனும்
காத்திருக்க கவிவீசும்-கவி பேசும்.
வெண்தாடியின் வெற்றிலைவாய்-பதி
வெண்பாடலும் - வெண்ணிற வானில்
வெண்திரையில் - வாயசைக்க
வெண்கொற்றக்குடை கொண்டதே!
நின்வார்த்ததைகள் அப்படி- அதன
வீரியமப்படி !!!!
இடையினமும் - மெல்லினமும்
வல்லினம்
இன்னல் இடையூறு இனியிலாதென
இயம்பினான் இமயவன் முதல்வன்
இளவலும் பகன்றான் இன்பமினி காணென்று
இன்பமே இனிதான் என்று.