ஆளுமை
வெறுமனே அடக்கி ஆழ்வது தான்
ஆளுமையா?
இல்லை இல்லை என்று சொல்வது தான்
ஆளுமையா?
உள்ளதை இல்லை என்றும் இல்லாததை உள்ளதென்றும்
கூருவது தான் ஆளுமையா?
இல்லாவிட்டால் உள்ளதை உள்ள படியே கூருவது தான்
ஆளுமையா?
சில கூட்டம் பெயர் களை வைத்துக் கொண்டு நல்லவன்
போல நடிப்பதா ஆளுமை?
எது எப்படியோ யாரோ ஒருவர் எம்மை ஆளுவதென்றால்
போதும் என்று நினைப்பது தான் ஆளுமையா?
எது ஆளுமை என்று நீங்கள் நினைக் கிறீர்கள்?
சொல்லுங்கள் எனதருமை சகோதரர்களே!!!