ஏனிந்த அநியாயம் - கே-எஸ்-கலை

இறுவட்டுகளில் திரைப்பட விழியங்களைப் பார்த்தல் என்பது ஒருவருடைய சுயவிருப்ப செயற்பாடு.
(இறுவட்டு=DVD/VCD - விழியம்=Video)

இறுவட்டுகளைத் தடைச் செய்து, கட்டாயம் திரை அரங்குகளிலேயே திரைப்படங்களைப் பார்க்க வேண்டும் என்று சட்டங்கள் நடைமுறைப்படுத்தபட்டிருப்பதானது எவ்வாறு சரியானதாக இருக்கும் ?
அரசியல் செல்வாக்கும், வருமானமீட்டும் தந்திரோபாயமும் மிகுந்த திரைத்துறையினரின் இந்த சூறையாடல் யுக்திகளை தகர்க்க வேண்டியது அவசியமானதா இல்லையா ?

அப்பாவி பொதுமக்களின் பணத்தை ஆசைக் காட்டி அள்ளிப்போகும் இந்த சூதாட்டம் ஏன் கண்டுக்கொள்ளப் படுவதில்லை ?
திரைப்படங்களை கொள்வனவு செய்த முதலீட்டை இழந்தால் பணத்தை மீளளித்த நடிகர்கள் இருக்கிறார்கள்...ஆனால் திரைத்துறைக்கு ஆணிவேராய் இருக்கும் அடிப்படை நுகர்வோனாகிய "ரசிகன்" அதிருப்தியடையுமிடத்து அனுமதிச் சீட்டுக் கட்டணத்தை மீள வழங்க யாருக்கும் முன்வர தைரியம் உண்டா ?

முப்பத்து ஐந்து ரூபாய் கொடுத்து ஒரு இறுவட்டு வாங்கி ஐந்து படங்களை பார்க்கும் வாய்ப்பு இருக்கின்றது...அதுவும் மொத்த குடும்பத்திற்கும் குறித்த திரைப்படத்தைப் பார்க்க முடிகிறது !
இது பொது மக்களின் செலவைக் குறைக்கும் விதமாகவும் நேரத்தை விரயமாக்காத வசதியாகவும் இருக்கிறது !

பொது மக்களுக்கு இலாபகரமானதாக இருக்கும் இந்த இறுவட்டு முறை வணிகத்தை தடைசெய்துவிட்டு எதற்காக அதிகளவு பணத்தை சூறையாடும் திரையரங்க வணிகத்தை வற்புறுத்தி திணிக்கிறது சட்டம் ? (பதினைந்து நிமிட இடைவேளையில் ஒன்றுக்கு மூன்று விலை கூட்டிய சிற்றுண்டிகள் மூலம் சூறையாடப்படுவது வேறு கதை) இது ஒருவிதமான சர்வாதிகார நுட்பம் என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?

இப்போது "பிரம்மாண்டம்" என்ற விளம்பரத்தோடு பிரமாண்டமான குப்பைகளை திரைத்துறை குவித்துக் கொண்டிருக்கிறது. மேலும் திரைப்படம் என்பது சமூக சீரழிவுகளுக்கு பள்ளிக்கூடமாய் மாறிவிட்டது. இந்த வணிகத்தைப் பாதுக்காக மக்களைக் கொள்ளையடிப்பது எந்த விதத்தில் நியாயம் ?

இறுவட்டுகளை அனுமதிப்பதன் மூலம் பொது மக்களின் செலவை கணிசமான அளவில் குறைத்து, அர்த்தமற்ற திரைப்படங்களைப் புறக்கணிக்கச் செய்ய நல்ல வாய்ப்பு கிட்டும்!

இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?

எழுதியவர் : கே.எஸ்.கலை (16-Oct-14, 8:02 pm)
பார்வை : 122

சிறந்த கட்டுரைகள்

மேலே