நாங்கள்

பச்சை புல்வெளிகள் படர்ந்திருந்த மண்ணில்
நஞ்சை விதைத்திடவே படர்ந்தவர்கள் நாங்கள்

முன்னேற்ற பாதையென சொல்லியபடி
மூர்கத்தனம் செய்தவர்கள் நாங்கள்

அறிவாளி எனும் நினைப்போடு
அடிப்படைகளை தகர்க்கும் மூடர்கள் நாங்கள்

இயல்பாய் கிடைத்த மழையை கெடுத்து
அமிலம் தூவும் ஆறறிவு நாங்கள்...

இருக்கும் காற்றை நாசம் செய்து
செவ்வாய்யை சுற்றும் தோஷம் நாங்கள்

எழுதியவர் : கவியரசன் (17-Oct-14, 10:03 am)
Tanglish : naangal
பார்வை : 92

மேலே