முற்றுப்புள்ளியை நோக்கி

எதிர்பார்ப்புகளின்றி ஏமாற்றங்களும் இல்லை..
மாற்றங்களும் இல்லை..
அதில் நீ மட்டும் விதிவிலக்கல்ல!!
அத்தனையும் சுமந்து
உன் பதிலுக்காக காத்திருக்கும்
நிமிடங்கள் தான் எவ்வளவு அழகானது!!
என்னை முட்டாளாக்காமல்
ஒவ்வொரு நாளையும்
நகர்த்திக் கொண்டிருக்கிறாய்!
எல்லாவற்றிக்கும் சேர்த்து ஒருநாள்
ஏமாற்றம் எனக்கு மிஞ்ச போகிறது
என்பதை மனம் அறிந்தும்
தவிர்க்காமல் ஏற்க காத்திருக்கும்
முட்டாள் நான்!!
தொலைந்து போக காத்திருக்கிறேன்..
சற்று என் சுமைகளை குறைக்க
தொடர்கிறது என் காத்திருப்புகள்!!
மொத்த பிழையும் திருத்த மறந்து
விட்டப்பட்ட காகிதம் நான்!!
வெகுவிரைவில் வைக்க காத்திருக்கிறேன்
அனைத்திற்குமான முற்றுப்புள்ளியை!