வேண்டுவது எவை

கங்கையில் காசியில் மூழ்கிட வேண்டாம்
பாவத்தில் தினம் தினம் மூழ்காதிருந்தால்!
கடவுளைத் எங்கெங்கும் தேடிட வேண்டாம்
கண்ணியமாய் எந்நாளும் வாழ முடிந்தால்!
யாத்திரைகள் எங்கேயோ போக வேண்டாம்..
யாருக்கும் துரோகம் ஒன்றும் இழைக்காதிருந்தால்!
சாத்திரங்கள் சரளமாய் ஓதல் வேண்டாம்..
சாக்கடை போல் சபலமின்றி வாழ முடிந்தால் !
யோகங்கள் யாகங்கள் எதுவும் வேண்டாம்..
யோகியாய் கடமைகள் புரிந்தே வந்தால்!
பொக்கிஷங்கள் புதையல்கள் தேட வேண்டாம்..
பொன் போன்ற மனதுடனே பொலிவதென்றால்!
மேற்கண்ட இரண்டாம் வரிகள்படி வாழ முடியுமென்றால்
முதல் வரிகள் செய்வதை பின் நிறுத்தல் வேண்டாம்!